1. Home
  2. தமிழ்நாடு

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம் - முழு விவரம் இதோ!

train

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மிக முக்கியமான ரயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நெல்லை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12632) : நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், தற்போது இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 1-ம் தேதி (வியாழக்கிழமை) முதல், இந்த ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இரவு 8.50 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12662) : செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், தற்போது மாலை 6.45 மணிக்குப் புறப்படுகிறது. புதிய மாற்றத்தின்படி, ஜனவரி 1 முதல் மாலை 6.50 மணிக்குப் புறப்படும். ஆனால், இந்த ரயில் சென்னை எழும்பூரை வழக்கத்தை விட முன்னதாகவே, அதாவது காலை 5.55 மணிக்கே சென்றடையும் வகையில் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16102) : செங்கோட்டை மற்றும் தென்காசி வழியாக இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் இந்த ரயில், ஜனவரி 1 முதல் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது காலை 6.05 மணிக்கே தாம்பரத்தைச் சென்றடையும்.பயண நேரக் குறைப்பு மற்றும் வேக அதிகரிப்பு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 1-ம் தேதி முதல் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்களது பயண நேரத்தை ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Trending News

Latest News

You May Like