இன்று தவெகவில் இணையும் முக்கிய பிரமுகர்கள் விவரங்கள் இதோ..!

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக, அதிமுகவில் இருந்து முக்கிய ‘தலைகள்’ இணையப் போவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்யை இன்று ஜூன் 10-ல் நேரில் சந்தித்து விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைய உள்ளனர்.
தவெகவில் இணையும் அருண் ராஜுக்கு என்ன பதவியை விஜய் வழங்குவார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அருண் ராஜுக்கு தவெக பொதுச் செயலாளர், இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் அருண் ராஜூக்கு உடனே முக்கிய பதவி வழங்கக் கூடாது என எதிர்ப்பையும் தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் என்ற பதவி, அருண் ராஜுக்கு வழங்கப்படக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
இதேபோல தவெகவில் இணையும் மேலும் சில பிரமுகர்கள் விவரங்களும் வெளியாகி உள்ளன.
திமுகவைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன்
அதிமுகாவில் இருந்து பாஜகவுக்குப் போன மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி
அதிமுகவைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன் ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஆகியோரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைய இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.