வருகிறது புயல் - புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு..!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறியுள்ளது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதோடு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பருவமழை பாதிப்புகள் குறித்து 93450 88997 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் மழை கால இடர்பாடு குறித்து 1077, 04366-226 623, வாட்ஸ்அப் எண்- 94885 47941 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தை 04365-1077, 1800-233-4233, வாட்ஸ்அப் எண்-84386 69800 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.