1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..!

1

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தரமணி, வேளச்சேரி, ராயப்பேட்டை, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 

சென்னை ஓஎம்ஆர் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். செம்மஞ்சேரி, நாவலூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 மற்றும் இலவச உதவி எண் 1913, வாட்ஸ் அப் எண் 9445477205 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
 

சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி. சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like