1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

1

மக்கள் தீபாவளியைக் கொண்டாட தங்கள் ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். 

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஏற்கனவே அறிவித்தபடி, கோயம்பேடு உள்பட ஐந்து இடங்களில் இருந்து நேற்று (நவ.09) பேருந்துகள் இயக்கப்பட்டன.இன்று (நவ.10) 3,995 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

எனினும், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழைக்கிடையே ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையியல் அணிவகுத்துச் சென்றனர்.

மாதவரம் : சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் : சென்னை கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்) பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் : தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தாம்பரம் ரயில் நிலையம் : தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி : பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோயம்பேடு : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேற்குறிப்பிட்டுள்ள ஊா்களைத் தவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like