1. Home
  2. தமிழ்நாடு

காத்திருக்கும் கனமழை : சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!

11

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயரிடப்பட உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 710 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 590 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 800 கீ.மீ தொலைவிலும் உள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் தமிழ்நாட்டை நோக்கி வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 12 முத்ல் 20 செ.மீ மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக ராமநாதபுரம் முதல் திருவள்ளூர் வரை உள்ள வட கடலோர மாவட்டங்களில் ஐந்து நாள்களுக்கு கனமழை இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like