அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால், நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தாலும் கூடுதல் வெப்பம் நிலவு வருவதாக பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதாவது, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. மேலும், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதை தவிர்க்கும் படியும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.