அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெறித்த நிலையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 14 முதல் 17ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.