1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!

1

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டவ கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும்,  6-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய வேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியளை ஓட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like