1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்: வானிலை மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்: வானிலை மையம் எச்சரிக்கை !!


ஜனவரி 4ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மட்டும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேனி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழ்நாட்டின் கரையை ஒட்டி 3.6 கி.மீ. உயரத்திற்கு நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்: வானிலை மையம் எச்சரிக்கை !!

ஜனவரி 4-ல் தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜன. 5,6-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like