1. Home
  2. தமிழ்நாடு

மும்பையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1

மஹராராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே, ரத்னகிரி, ராய்காட் அமராவதி மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் விடியவிடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல வழித்தடங்களில் உள்ளூர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புனே, ரத்னகிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மும்பையில் பல்வேறு இடங்களில் 300 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மும்பையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் மூழ்கிய இடங்களை வீடியோ எடுத்து, அப்பகுதி மக்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like