தொடர் கனமழை..! கோவையில் மழைநீரில் சிக்கிய பேருந்து மீட்கப்பட்டது!
கோவையில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், ரத்தினபுரி - சங்கனூர் ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியது. அப்போது அவ்வழியாக 25 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து பாலத்தின் அடியை மழை நீரில் சிக்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் சுமார் 25 பேரை கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்
இந்நிலையில் கிரேன் மூலமாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி மழை நீரில் சிக்கிய அரசு பேருந்தை வெளியே எடுத்து மீட்டனர். மேலும் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீர் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டது.