கனமழை எச்சரிக்கை: தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இன்று சுமார் 25 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கனமழை காரணமாக நாளை (நவ.0) தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
newstm.in