கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 | 

தமிழகத்தில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு அவ்வப்போது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தெற்குவங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவில்லை. இருந்தபோதிலும் நேற்று தென்மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

school

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பகலில் இருந்தே தொடர் கனமழை பெய்தது. இந்நிலையில்  தொடர்மழை காரணமாகவும், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாலும் தென் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.

இதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், தஞ்சை, தேனி, நாகை மாவட்டங்களில் பள்ளி, மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP