1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை! காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கு, எப்போது கரையை கடக்கிறது?

1

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விட்டது. தற்போது சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கு சுமார் 490 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 590 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டி புதுவை - நெல்லூர் இடையே சென்னைக்கு அருகில் வரும் 17ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும். அந்த சமயத்தில் தரை காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்.

இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், வரும் 17ஆம் தேதி சென்னை, புதுவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றார்.

Trending News

Latest News

You May Like