1. Home
  2. தமிழ்நாடு

இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..!

1

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதில் இன்றும் (14-ந் தேதி), நாளையும் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் நாளை மறுநாள் (16-ந் தேதி) கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like