இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள்,திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
வரும் செவ்வாய்க்கிழமை (அக். 1) தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வியாழக்கிழமை (அக். 3) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மேற்கண்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.