இன்று மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கால உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்!
மாநில உதவி எண் - 1070
மாவட்ட உதவி எண்- 1077
வாட்ஸ் அப்- 94458 69848
விழுப்புரம் உதவி எண்கள் அறிவிப்பு
* 1077, 04146-223 265, 7200151144 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
* விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
* கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.