தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
மே 18-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும். மேலும் இன்று திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப் பகுதிகள்), குமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்த 5 நாள்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.