நாளை 4 மாவட்டங்களில் கனமழை...2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்..!

வானிலை மையத்தின் ரெட் அலர்ட் அறிவிப்பு எதிரொலியாக, கடந்த 2 நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதித்துள்ள மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. இந் நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது;
தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது. நாளை நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி,, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.