1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை..!

1

அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த 4 மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்றும் வீச கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like