இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பூர், நாகை, மயிலாடுதுறை, திரூவாரூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் அக்டோபர் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.