1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த "4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு".. வானிலை மையம் தகவல்..!

Q

வெயிலின் தாக்கத்தால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது. வெயில் காரணமாக பல்வேறு இடங்களில் மக்களின் அன்றாட வேலைகள் முடங்கியது.
இந்த நிலையில், கோடை வெயிலின் சூட்டைத் தணிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை முதலே சென்னையில் உள்ள அடையாறு, வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும், கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் பலத்தக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
இன்று, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும் பெய்தது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
அதேபோல் நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை தகவல் அறிவித்துள்ளது. எனவே இந்த கோடை மழையால் தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Trending News

Latest News

You May Like