1. Home
  2. தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் கொட்டிய பெருமழை... 3 மணி நேரத்தில் 362 மி.மீ. மழை..!

1

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளங்களில் மழை தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெய்த மழை தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: ராமேஸ்வரத்தில் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் அதிகப்படியாக 411 மி.மீ மழை பெய்துள்ளது. தங்கச்சிமடத்தில் 322 மி.மீ. மழைப்பொழிந்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது.

3 மணி நேரத்தில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 190 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like