கோவையில் கொட்டி தீர்த்த கனமழை... நீரில் மூழ்கிய தனியார் பேருந்து..!
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.. கோவை மாநகரில், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், விமான நிலையம், விளாங்குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவனந்தகாலனி முதல் சாய்பாபாகாலனி செல்லும் வழியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழைநீர் தேங்கிய நிலையில் தனியார் பேருந்து மழை நீரில் மூழ்கியது. நல் வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் மீட்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மதுரை, தேனி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, தருமபுரி, திருச்சி, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Heavy rains in #Coimbatore caused a private bus to get stuck in #floodwaters on a railway bridge near #MettupalayamRoad, leaving passengers stranded for more than an hour. Emergency services were dispatched to assist.
— DT Next (@dt_next) October 13, 2024
Read: https://t.co/sqBo1fsKWI#dtnext pic.twitter.com/lEr4ECzsQH