சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை.. திடீரென மாறிய வானிலை !

தலைநகர் சென்னையில் நேற்றிரவு விடிய விடிய கனமழை பெய்தது. சென்னையில் நேற்று பகல் முழுவதும் வெயில் காணப்பட்டது. இதனால் நிலவிய வெப்பத்தால் மக்கள் அவதியடைந்தனர்.
ஆனால் சென்னையில் இரவில் வானிலை அப்படியே முற்றிலும் மாறியது. இரவில் திடீரென கனமழை கொட்டியது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.
ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. காலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமமடைந்தனர். அதேநேரத்தில் காலையிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
newstm.in