1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் கனமழை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

1

சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

 

கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதியில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மழை பெய்து வரும் நிலையிலும் களத்தில் ஆய்வு மேற்கொண்டார். யானை கவுனி பகுதியில் நடைபெறும் மழை வெள்ளம் வெளியேற்றும் பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டு அறிந்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அதன்பின் புளியந்தோப்பு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்..அப்போது சாலையோர தேநீர் கடையில் தூய்மை பணியாளர்களுடன் தேநீர் அருந்தினார் முதல்வர் ஸ்டாலின் 

Trending News

Latest News

You May Like