13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் சில வாரங்களாக தொடர்ந்து பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். இது தவிர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசலாம் அதனால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
newstm.in