கனமழை கன்பார்ம்..! இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்..!
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்," கடந்து (24-11-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (25-11-2024) காலை 08:30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 860 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்" என கூறப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளை வரும் 27ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.27ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
நவ.28ம் தேதி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நவ.29ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரைப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்துவரும் 5 தினங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில், வட-வடமேற்கு திசையில் பயணித்து இலங்கை - தமிழக கடற்கரையை நோக்கி நகரும்" என கூறப்பட்டுள்ளது.
சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 940 கி.மீ தொலைவிலும், நாகைக்கு 740 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது