1. Home
  2. தமிழ்நாடு

நெஞ்சை உருக்கும் சோகம்..! எனக்கு கை, கால் விழுந்திடுச்சு... உதவி கேட்கும் காமெடி நடிகர்..!

1

ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் வெங்கல் ராவ். காமெடி நடிகராக அறியப்படும் இவர், சினிமாவுக்குள் ஃபைட்டராக நுழைந்தவர். தொடர்ந்து ஒரு படத்தின் சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட காயத்தால் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டார்.

1995-ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் பிரபு நடித்த 'காட்டுமரக்காரன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பத்தாண்டுகளுக்குப்பிறகு, தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

இப்படி ஒரு நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் வெங்கல் ராவ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வணக்கம் எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. நடக்க முடியல, பேச முடியல. விழுந்திடுச்சு. எடுக்க ஹாஸ்பிடலுக்கு காசு இல்லை. மருந்து கூட வாங்க முடியல. சினிமா நடிகர்கள், சங்கங்கள் உதவி செய்யுங்க. உங்களால முடிந்த உதவி செய்யுங்க. இதுக்கு மேல என்னால பேச முடியல என்று கூறியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like