#HEART BREAKING: உதயம் தியேட்டர் இடித்து தரைமட்டம்..!

அசோக் நகரின் அடையாளமாகவே உதயம் தியேட்டர் இருந்தது. இப்போது தியேட்டர் இடிக்கப்பட்டுள்ளது, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள், சினிமா கலைஞர்கள் என பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உதயம் தியேட்டர்' முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
Fall of Udhayam complex 😔 pic.twitter.com/k57JyhVtOz
— Avi_nash (@im_avi_nash_) February 11, 2025