மன அழுத்தத்தால் சுகாதாரப்பணியாளர் தூக்கிட்டு தற்கொலை!!

கேரளா: திருவனந்தபுரத்தில் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உதயகுளங்கரை பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சுகாதாரப் பணியாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டறியப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக சுகாதாரப் பணியாளர் கடிதம் எழுதிவைத்துள்ளார்.
மேலும் சுகாதாரப் பணியாளர் இறந்த இடத்தில் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவர் கொடுத்த மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.