வேகமாக குணமடையும் கொரோனா... காரணம் இந்த மருந்து தான்!

வேகமாக குணமடையும் கொரோனா... காரணம் இந்த மருந்து தான்!

வேகமாக குணமடையும் கொரோனா... காரணம் இந்த மருந்து தான்!
X

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் "ரெம்டெசிவிர்"  என்ற பரிசோதனை மருந்தினால் விரைவாக குணமடைந்து வருகின்றனர்,

கடுமையான சுவாச பிரச்னை, காய்ச்சல் உள்ள நோயாளிகள் கூட இந்த மருந்தை எடுத்துக்கொண்ட பின்னர் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிலியட் சயின்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, எபோலாவுக்கு எதிராக ஓரளவு பலன் கொடுத்தது. சார்ஸ், மெர்ஸ் ஆகிய கொடும் நோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், கொரோனாவுர்ரு எதிராக ரெம்டெசிவிர் செயல்பட்டது குறித்து தெரிவித்தது.


கொரோனாவை தடுக்க ரெம்டெசிவிர் மருந்துகளின் சோதனைகள் பிற மருத்துவ மையங்களிலும் நடந்து வருகின்றன. உலகெங்கிலும் உள்ள 152 சோதனை தளங்களில் கடுமையான கோவிட் -19 அறிகுறிகளுடன் 2,400 நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதனையாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று கிலியட் நிறுவனம் கூறியுள்ளது.

newstm.in

Next Story
Share it