1. Home
  2. தமிழ்நாடு

வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்..!

Q

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் கார் முதல் விற்பனை தொடக்க விழா ஆகியவை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.
காலை 10 மணியளவில் தூத்துக்குடி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வின்பாஸ்ட் ஆலைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ஆலையை திறந்து வைத்து, கார் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார்.
வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
தூத்துக்குடி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொடங்கி வைத்தார். இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
"தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்று வின்பாஸ்ட். அடிக்கல் நாட்டின் 17 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like