1. Home
  2. தமிழ்நாடு

ஆயுசுக்கும் சீனாவின் அதிபர் அவர் தான்! கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிப்பு !

ஆயுசுக்கும் சீனாவின் அதிபர் அவர் தான்! கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிப்பு !


"சீனாவின் அதிபராக ஜீ ஜின்பிங்கின் ஆயுள் முழுவதும் நீடிப்பார்" என கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அதிபராக கடந்த 2012-ம் ஆண்டு ஜீ ஜின்பிங்கின் பதவியேற்றார். இந்த நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்றது. அதில், அதிபர் ஜின்பிங்கின் நடவடிக்கைகள், அமெரிக்காவுடனா தொடர்பு மற்றும் ஆட்சி அதிகாரம் உள்ளிட்டவை மதிப்பிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2035-ம் ஆண்டு வரை சீனாவின் அதிபராக "ஜின்பிங்" பதவி வகிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், சீன ராணுவத்தின் தலைமை பதவி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றிலும் ஜின்பிங் ஆயுள் முழுவதும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறிவிப்பு, உலக நாடுகளில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like