1. Home
  2. தமிழ்நாடு

2024ம் ஆண்டின் உலகின் மிக அழகான ஆண் இவர் தான்..!

1

தென் கொரியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள இசைக்குழு பிடிஎஸ்.இந்தக் குழுவில் ஆர்.எம், ஜின், சுகா, ஜெ ஹோப், ஜிமின், வி, ஜுங்குக் என ஏழு இளைஞர்கள் உள்ளனர்.

இந்த K-Pop இசைக்குழு உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ளது. இந்த பிடிஎஸ் கொரியன் இளைஞர்கள் வெளியிடும் ஒவ்வொரு பாடல்களும் காட்சிகளும் உலகளவில் அதிகம் பகிரப்படுகின்றன. இவர்களுடைய பெரும்பாலான பாடல்கள் கொரிய மொழியில் ஆங்கிலம் கலந்துதான் எழுதப்பட்டிருக்கும். இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர்.

இந்த நிலையில், 2024-ம் ஆண்டின் உலகின் மிக அழகான ஆண் என்ற பட்டத்தை BTS-ன் வி (V) தட்டிச் சென்றுள்ளார். நுபியா இதழ் நடத்திய உலகளாவிய வாக்கெடுப்பில் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றதன் மூலம் இவர் இந்த பட்டத்தை வென்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்:

கிம் டே-ஹியுங் (V) – BTS இன் வி
சியாவோ (Xiao Zhan) – சீன நடிகர்
ஜாங் ஜெஹான் – சீன நடிகர் மற்றும் பாடகர்
கெரெம் பர்சின் – துருக்கி நடிகர்
ஹலீல் இப்ராஹிம் செய்ஹான் – துருக்கி நடிகர் மற்றும் பாடகர்
என்ஜின் அக்யுரெக் – துருக்கி நடிகர்
வாங் யிபோ – சீன நடிகர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்
கிம் சியோக் ஜின் – BTS இன் ஜின்
ஜஸ்டின் பீபர் – கனேடிய பாடகர்
ரெஜி-ஜீன் – பிரிட்டிஷ் நடிகர்

Trending News

Latest News

You May Like