கூட்டணிக்கு பேசி கொண்டு இருக்கிறார்... விரைவில் நல்ல செய்தி வரும் - திண்டுக்கல் சீனிவாசன்..!
திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசியிருப்பது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு வரும் கட்சிகள் பற்றிய அவர் பேசியதாவது:-
கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் ரண வேதனை இருக்கிறது. எவன் வந்தாலும் சும்மாவா வரான். ஒரு 20 சீட் கொடுங்க. ஒரு 50 கோடி கையில் கொடுங்க. ரூ.100 கோடி கொடுங்கனு கேட்குறாங்க.. ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள். நாம் எங்கே போவது? இப்போது அதிமுக மார்க்கெட் போய் கொண்டிருக்கிறது. எடப்பாடியாரை தான் மக்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். அப்போது ஏன் தலைவரே.. ரூபாயை குறைச்சிக்க கூடாதா? என்று சொன்னால்.. இதை வைத்து தான் பிஸ்னஸ் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கொடுமையில் எடப்பாட மாட்டி கொண்டு இருக்கிறார். கூட்டணிக்கு பேசி கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும்.
கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான்.. ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அதிமுக கூட்டணியில் இணைய எந்த கட்சி ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி கேட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.