1. Home
  2. தமிழ்நாடு

இனி அவர் பழனிசாமி அல்ல , பச்சை பொய் பழனிசாமி - சேகர்பாபு விமர்சனம்..!

Q

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அறநிலையத்துறை  அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பாக 42 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும்,  26 கிலோ அரிசியும் வழங்கப்பட்டதாக கூறினார்.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி  பொய் கூறுவதால், அவரை பச்சை பொய் பழனிச்சாமி என அழைப்பதாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து வியாசர்பாடி விவகாரத்தில்  தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தாக்கப்பட்டு இருந்தால் இன்னார் இனியவர் என பாராமல் முதலமைச்சர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என கூறினார்.

இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending News

Latest News

You May Like