HDFC வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்..!
2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் நிதி நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1949-ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டன.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, அக்சிஸ் பேங்க் தகுதியற்ற நிறுவனங்களுக்கு சேமிப்பு கணக்குகளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தனித்துவமான வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை (UCIC) வழங்கத் தவறியதற்கும், வேளாண் கடன்களுக்கு முறையற்ற பாதுகாப்பு பிணையத்தை பெற்றததற்காகவும் ரூ.1.60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் முழுமையான சொந்த நிறுவனம் ஒரு தொழில்நுட்ப சேவை வழங்குநராக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்று சில விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக HDFC பேங்குக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட்கள் மீதான வட்டி விகிதம், வங்கிகளால் ஈடுபடுத்தப்படும் மீட்பு முகவர்கள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை ஆகியற்றின் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி. இரவு 7 மணியில் இருந்து காலை 7 மணிக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்வதை உறுதி செய்வதில் வங்கி தோல்வியடைந்து விட்டதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.