HBD SPL : சூப்பர்ஸ்டார் ரஜினியின் அதிர வைக்கும் பஞ்ச் டயலாக்குகள்..!
'படையப்பா' திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கூறியது போல, "வயதானாலும் இவரின் ஸ்டைலும் அழகும்" இவரை விட்டுப் போகவில்லை. இந்தாண்டு டிசம்பர் 12-ம் தேதியோடு அவரது 74-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவரின் மிகச்சிறந்த 10 பஞ்ச் டயலாக்குகளைப் பார்ப்போம்.
ஒரு படத்திலேயே பல பஞ்ச் டயலாக்குகளைப் பேசுபவரிடம், 'டாப் 10' என அலசுவது கொஞ்சம் சிரமம் தான். முடிந்தளவு ஆராய்ந்து உங்களுக்கு விருந்துப் படைக்கிறோம். உங்களுக்கு தோன்றுவதை கீழே உள்ள பாக்ஸில் கமெண்டிடுங்கள்!
படம் - பாட்ஷா
டயலாக் - நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
படம் - முள்ளும் மலரும்
டயலாக் - கெட்ட பய சார் இந்த காளி
படம் - பாட்ஷா
டயலாக் - நல்லவங்கள ஆண்டவன் நெறைய சோதிப்பான், ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்.
படம் - 16 வயதினிலே
டயலாக் - இது எப்டி இருக்கு?
படம் - அண்ணாமலை
டயலாக் - நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்.
படம் - கபாலி
டயலாக் - நா வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு...
படம் - முத்து
டயலாக் - நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்.
படம் - படையப்பா
டயலாக் - கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைச்சது என்னிக்குமே நிலைக்காது.
படம் - சிவாஜி
டயலாக் - கண்ணா! சிங்கம் சிங்கிளா தான் வரும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.
படம் - காலா
டயலாக் - க்யாரே செட்டிங்கா? வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன். மொத்தமா வாங்கலே.
ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்: 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம், ஓரிரு காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்தாலும், பாடலிலும் இடம்பெற்று படத்தின் பஞ்ச் வசனமாக மாறியது.
இப்படி அவரின் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கையும் சொல்லிக் கொண்டேப் போகலாம். உங்களுக்குப் பிடித்ததை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்!