#HBDரஜினிகாந்த்: மிஸ் பண்ணக் கூடாத ரஜினியின் 5 படங்கள்..!!
 

 | 

தமிழ் சினிமாவை தனது மாஸாலும், ஸ்டைலாலும் ஆக்கிரமித்திருக்கும் ரஜினியின் றந்தநாளை ரசிகர்கள் வருகிறார்கள் . ஆனால் உண்மையில் ஸ்டைலும் மாஸும் அவருடன் இணைந்த பிறகு அவருக்குள் இருக்கும் நடிப்பு ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டது. 70 மற்றும் 80-களில் அவர் நடித்தப் படங்களை நேரம் கிடைக்கும் போது பாருங்கள். இப்போது நாம் விசில் அடித்துக் கொண்டாடும் ஒருவர் நடிப்பால் மிரட்டி நம் கண்களை வியர்க்க வைப்பார். சரி எந்த படம் பார்ப்பது என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். அதையும் நாங்களே சொல்கிறோம். நிறையப் படங்கள் ரஜினியின் நடிப்புக்கு அடையாளமாக இருந்தாலும் அதில் சிறந்த 5 படங்களின் பட்டியலை உங்களுக்கு இங்கே தருகிறோம். 

முள்ளும் மலரும் - 1978 

மிஸ் பண்ணக் கூடாத ரஜினியின் 5 படங்கள்!

காளி என்ற கேரக்டரில் தங்கை மீது அளப்பரிய அன்பு வைத்திருக்கும் அண்ணனாக சென்டம் வாங்கியிருப்பார் ரஜினிகாந்த். சிலர் மீது காரணமே இல்லாமல் கோபப்படுவோம், நன்கு யோசித்துப் பார்த்தால் அவர்களுக்கும் நமக்கும் எதுவும் இருக்காது. இப்படியான கதை களத்தில் ரஜினியும் சரத்பாபுவும் இரு துருவங்களாக நடித்திருப்பார்கள். பெற்றோரை இழந்த நடுத்தர வர்க்கத்து ஆண், தனது தங்கையை நல்ல இடத்தில் கரை சேர்க்க துடிப்பதை கண் முன் நிறுத்தியிருப்பார் ரஜினி. போதையில் லாரி டயருக்கு தனது கையை எலுமிச்சையாக்கி விட்டு, ஒன்றை கையுடன் அசல் மாற்றுத் திறனாளி போலவே நடித்திருப்பார் ரஜினி. 


ஆறிலிருந்து அறுபது வரை - 1979 

மிஸ் பண்ணக் கூடாத ரஜினியின் 5 படங்கள்!

தாய் தந்தையற்ற குடும்பத்தின் மூத்த மகன் இரண்டு தம்பிகளையும் ஒரு தங்கையையும் தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார். தம்பிகளின் படிப்பிற்காகவும், தங்கையின் திருமணத்துக்காகவும் எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார் ரஜினி. தங்கையின் திருமணத்துக்குத் தேவைப்படும் பணத்தேவையைப் பூர்த்தி செய்ய, நண்பர் சொல்லும் பெண்ணை மணந்துக் கொள்கிறார். ஆனால் உண்மையில் பெண் வீட்டார் அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள். தம்பிகள் இருவரும் வேலைக்குச் சென்று தனக்கு உதவியாக இருப்பார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிக்கு, தலையில் இடி விழுகிறது. காரணம் இருவரும்மெ வீட்டை விட்டு சென்று விடுகிறார்கள். மனைவியை தீ-க்கு இரையாக்கிவிட்டு, படாத கஷ்டமெல்லாம் படுகிறார். பின்னாளில் புகழ் பெற்ற கதாசிரியராக மாறும் போது தம்பி, தங்கை மூவரும் இவரிடம் அடைக்கலமாகும் படி அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும். இதில் பல முகபாவனைகள், உணர்வுகள், கையறு நிலை என நம்மில் ஒருவராக தோன்றிய ரஜினி, தன் நடிப்பால் நம் கண்களை பதம் பார்த்திருப்பார்.

பைரவி - 1978 

மிஸ் பண்ணக் கூடாத ரஜினியின் 5 படங்கள்!

இந்தப் படத்தில் தொடங்கிய ரஜினியின் தங்கை செண்டிமென்ட், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படையப்பா வரை தொடர்ந்தது. சின்ன வயதில் தங்கையை தவற விடும் ரஜினி, அவள் இறந்து விட்டாள் என நினைக்கிறார். ஆனால் ரஜினியின் முதலாளியும் பெண் பித்தனுமான ராஜலிங்கம் அவளை கற்பழித்து கொல்கிறான். ஆனால் விதியின் வசத்தால் தங்கையின் இறப்புக்கு அண்ணன் ரஜினியே காரணமாகிறார். இந்த உண்மை பின்பு தெரிய வர, குற்றவுணர்ச்சியால் கூனி குறுகுகிறார் மூக்கையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினி. பிறகு அந்த கள்வனைக் கொன்று தங்கையின் ஆன்மாவை சாந்தியடையச் செய்கிறார். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் நெஞ்சு கனமாவது நூறு சதவீதம் உறுதி!

அபூர்வ ராகங்கள் - 1975 

மிஸ் பண்ணக் கூடாத ரஜினியின் 5 படங்கள்!

ரஜினியின் திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் இது. பாண்டியனாக கொஞ்ச நேரமே திரையில் வந்தாலும், பார்ப்பவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிற நடிப்பைக் கொடுத்திருப்பார். முதல் ஷாட்டான 'கேட்டை' திறப்பது முதல், மனைவி ஶ்ரீவித்யாவின் கச்சேரியை ரசித்தவாறு இறப்பது முதல் அத்தனையும் செம 'ஒர்த்'. இந்த பாண்டியன் பின்னாட்களில் பார் போற்றும் உச்ச நட்சத்திரமாவார் என்பது கண்களுக்குத் தெரியாத கல்வெட்டில் அப்போதே பொறிக்கப்பட்டிருப்பதை இப்போது உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 

ஜானி - 1980

மிஸ் பண்ணக் கூடாத ரஜினியின் 5 படங்கள்!

நவீன உடைகளுடன் ஜானியாகவும், வழித்து வாரிய தலை, கறுப்பு ன்  கண்ணாடியுடன் வித்யாசகராகவும் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் ரஜினி. தமிழ் திரைப்பட கிளாசிக் வரிசையில் முதல் வரிசையில் இருக்கக் கூடிய படம் இது. பாடகியாக ஶ்ரீதேவி, அவரது தீவிர விசிறியாக திருடன் ஜானி, அவனது சோக பின்னணி. ரஜினி - ஶ்ரீதேவி இருவருக்குள்ளும் இருக்கும் மெல்லியக் காதல். அந்த காதலை ஹைலைட் செய்யும்படி, இசைஞானியின் மென்மையான பின்னணி இசை. 

முடி திருத்தும் சிக்கனவாதியாக வித்யாசாகராக இன்னொரு ரஜினி. மலை உச்சியில் எந்த தொந்தரவும் இல்லாமல் வசித்து வரும் அவர், வீட்டிற்கு ஒரு வேலைக்காரியை நியமிக்கிறார். அவள் மீது அவருக்கு ஒரு பிரியம். ஆனால் அவளோ அலைபாயும் மனதுக்கு சொந்தக்காரி. அவளைக் கட்டுப்படுத்த முடியாமல், தோற்றுப் போய் அன்புக்கு ஏங்குகிறார். இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் மனம் நிச்சயம் கணமாகும். 

இன்னும் சில திரைப்படங்கள் நடிகர் ரஜினியின் நடிப்பைப் பறைசாற்றும் வகையில், இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்தவைகளையும் பட்டியலிடுங்கள்!

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP