இன்னும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வாங்கலையா? இதோ உங்களுக்கான குட் நியூஸ்!!

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணபங்களை பதிவேற்றம் செய்வதற்கான முதற்கட்ட சிறப்பு முகாம் கடந்த 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த முதற்கட்ட சிறப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் 36 லட்சத்திற்கும் அதிகமான விண்ணபங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இதையடுத்து தற்பொழுது வரை இந்த விண்ணபங்களை பெறாதவர்கள் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கப்படும். அந்த சமயங்களில் விண்ணப்பத்தினை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட முகாமானது வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.