1. Home
  2. தமிழ்நாடு

ஆதார் - பான் இன்னும் இணைக்கவில்லையா..? மே 31 தான் கடைசி நாள்..!

1

நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது.ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை  வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். அதேபோல் PAN அட்டை வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.இந்த இரண்டு அட்டைகளையும் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருமான வரி மோசடிகள், குளறுபடிகள் நடப்பதை கண்டறிய  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

 நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பான் அட்டையை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வருகிறது. பான் - ஆதாரை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இணைக்காதவர்களுக்கு பின்னர் அபாரதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பில் தொய்வு நிலை இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பான் - ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை நேற்று (மே 28) வெளியிட்டுள்ளது.  அதிக விகிதத்தில் வரி விலக்குகளைத் தவிர்க்க வரும் மே 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதை இணைக்காவிட்டால், மாதச் சம்பளத்தில் வழக்கமான டிடிஎஸ் விகிதத்தை விட, இரு மடங்கு கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  PAN எண்ணுடன் ஆதார் எண்ணை மே 31ம் தேதிக்குள் இணைத்துவிட்டால் டிடிஎஸ் கழிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால்,  அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு)  எனவும் எச்சரித்துள்ளது..


 

Trending News

Latest News

You May Like