ரயில்வேயின் 32,438 குரூப் டி பணியிடங்களுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா ? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

ரயில்வே துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. இதற்காக பல லட்சம் பேர் தீவிரமாக படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வேயின் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் கால அவகாசம் இன்று (பிப்.22) முடிய இருந்த நிலையில், தற்போது அதனை நீட்டித்துள்ளனர்.
மொத்தம் 32,438 பணியிங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (பிப்.22) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிராக் மெயிண்டர்ன் - 13,187 பணியிடங்கள்
டிராபிக் பாயிண்ட்மேன் பி - 5,058
அஸிஸ்டண்ட் (ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) -3,077
மெக்கனிக்கல் அஸிஸ்டண்ட் - 2,587
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1,381
அஸிஸ்டன் லோகோ - 950
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் - 799
அஸ்ஸ்டன் ஆபரேஷனஸ் - 744
அஸிஸ்டண்ட் லோகோ (டிசல்) - 420
அஸிஸ்டண்ட் (p-way) - 247 என மொத்தம் 32,438 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது தேசிய அப்ரெண்ட்டீஸ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும்.
வயது: ஜனவரி 1, 2025 படி 18 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: இதற்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் மற்றும் மாற்றுதிறனாளிகள் 250 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாயும் மாற்றுதிறனாளிக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும்.
தேர்வு முறை: இந்த பணிகளுக்காக நான்கு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆன்லைன் தேர்வு, பின்னர் உடன் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை என அடுத்தடுத்து கட்டங்களாக நடத்தப்படுகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு: இன்று பிப்.22 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 03ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வர்கள் மார்ச் 03ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.