தெறி படத்தின் இந்தி டீசர் பார்த்தாச்சா ?
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘தெறி’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. தற்போது இதன் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நாயகனாக நடித்துள்ளார். அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இயக்கியுள்ளார்.
‘பேபி ஜான்’ படத்தினை முரத் கேட்டானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ப்ரியா அட்லி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் வருண் தவான் உடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்துள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. 4 மணி நேரத்தில் 5.7 மில்லியன் பார்வைகள் அந்த டீசருக்கு கிடைத்து இருக்கிறது.