1. Home
  2. தமிழ்நாடு

கவினின் பெக்கர் டீசர் பார்த்தீங்களா..?

Q

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்பவர் நெல்சன் திலிப்குமார். விஜய் டிவியில் உதவி இயக்குனராகத் தன் பயணத்தைத் தொடங்க்கி, பிறகு பல ஹிட் ஷோக்களை அங்கு இயக்கியிருக்கிறார். 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியை இவர் இயக்கிய போதுதான் அதில் நடிகர் சிம்பு கலந்து கொள்ள, அவருக்கும் நடிகர் பப்லுவுக்கும் பிரச்னை உண்டாகி, அந்தச் சமயத்தில் அது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

பிக்பாஸ் தொடங்கப்பட்ட போது அதன் முதல் சீசனையும் இயக்கியிருந்தார். இயக்குனராகச் சாதித்த நெல்சன் சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தனது முதல் படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். 'ப்ளடி பெக்கர்' எனப் பெயரிடபப்ட்டிருந்த இந்தப் படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருக்கிறார். 

இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தற்பொழுது படத்தில் கவின் கதாப்பாத்திரத்தின் இண்ட்ரோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. கவின் பிச்சைக்காரனாக சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். கால் இல்லாதவன் போல் நடித்து பிச்சை எடுப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like