ஜெயிலர் 2 ப்ரோமோ வீடியோ பார்த்தாச்சா..?

ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது.
ஜெயலிர் படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே இயக்குநர் நெல்சன் தெரிவித்து இருந்தார். இடையில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
சமீபத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சென்னை, கேரளா, பெங்களூரு மற்றும் பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ப்ரோமோ வீடியோவில் அனிருத் மற்றும் நெல்சன் திலிபிகுமார் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள்குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜெயிலர் 2 ப்ரோமோ வீடியோவைப் படமாக்கும்போது எடுத்த வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.