இதை கவனித்து உள்ளீர்களா ? மாத்திரைகள் பின்னால் இருக்கும் சிவப்பு கோடு.. எதற்கு தெரியுமா?
நீங்கள் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கும் போது அதன் ஸ்டிரிப்பில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இந்த கோடு எல்லா மாத்திரைகளிலும் இருக்காது. குறிப்பிட்ட சில மாத்திரைகளில் மட்டுமே இருக்கும்.
இப்படியான சிவப்பு நிற கோடு உள்ள மாத்திரைகள் அண்டி பயாட்டிக் மாத்திரைகளில் இருக்கும். இந்த மாத்திரைகளை டாக்டரின் அறிவுரையில்லாமல் சாப்பிடக்கூடாது. மற்றும் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பனையும் செய்ய கூடாது.
அதனால் நீங்கள் இனி மாத்திரை வாங்கினீர்கள் என்றால் அதன் காலாவதி தேதியை மட்டும் பார்க்காமல் இந்த சிவப்பு கோட்டையும் பார்த்து வாங்குங்கள். டாக்டரின் பரிந்துரையின்றி எந்த மாத்திரையையும் சாப்பிட கூடாது. அதனால் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மருந்தை உரிய ஆலோசனையின்றி உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால், இனி நாம் வாங்கும் மாத்திரைகளின் காலாவதி தேதியுடன், சிவப்புக் கோட்டையும் கவனிக்க வேண்டும்.