1. Home
  2. தமிழ்நாடு

மின் கட்டணம் கட்டவில்லையா? இனி ஆன்லைனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்..!

1

தமிழகத்தில் தற்போது வரை மின் கட்டணம் கணக்கிடும் பணி மேனுவலாத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடாக கணக்கீட்டாளர்கள் சென்று மின்சார மீட்டர்களை பார்த்து மின்சார பயன்பாட்டை கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை குறித்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழக மின்சார வாரியத்தில் 40 விழுக்காடு மின் கணக்கீட்டாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மின் கணக்கீட்டு பணியில் தொய்வு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்காகவும், மின் கணக்கீட்டுப் பணியை நவீனப்படுத்தும் நோக்கிலும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு.

மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ள இந்த பணியில் முதல் இரண்டு கட்டங்களில் 24 மாவட்டங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர்கள் எப்படி வேலை செய்யும், என்னென்ன வேலைகள் செய்யும் உள்ளிட்ட விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஸ்மார்ட் ஈபி மீட்டர் என்பது டிஜிட்டல் முறையில் செயல்படக் கூடியது. இது உங்கள் மின்சார பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் கணக்கிட்டு ஆன்லைனில் சேவ் செய்கிறது. இதனால், உங்கள் மின்சார கட்டணத்தை அளவிட, இனி கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் சேகரித்து, நேரடியாக சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்திற்கு தகவலை அனுப்பிவிடும். அங்கு அதிகாரிகள் அதை கணக்கிட்டுக்கொள்வார்கள். கணக்கிடப்பட தொகை ஸ்மார்ட் மீட்டர் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். பணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட விபரங்களும் அனுப்பப்படும்.

மேலும், மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், மின்சார ஃபியூஸ் கட்டையை பிடுங்க மின்சார ஊழியர்கள் நேரில் வரமாட்டார்கள். காரணம், டிஜிட்டல் ஈபி மீட்டர்கள் வந்துவிட்டால், அதிகாரிகள் அவர்களின் அலுவலகத்தில் இருந்தபடியே கட்டணம் செலுத்ததாக ஈபி கனெக்சனை ஆன்லைன் மூலமாக துண்டிக்க முடியும். மின்சார கட்டணம் செலத்தப்பட்ட பிறகு ஆன்லைனிலேயே உங்கள் கனக்சன் சரிசெய்யப்படும்.

சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த ஸ்மார்ட் ஈபி மீட்டர்கள் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வந்த பிறகு மின் கட்டணத்தில் பிரீபெய்டு சிஸ்டமும் வர இருக்கிறதாம். அதாவது முன்கூட்டியே குறிப்பிட்ட தொகையை மின்சார வாரியத்தில் செலுத்திவிட்டு மாதா மாதம் பயன்பாட்டு கட்டணத்தை ஆன்லனில் கழித்துக்கொள்ளலாம். இத்தனை வசதிகள் இருந்தும்,
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பயன்பாடு பெருகிவிடும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் ஈபி மீட்டர் மூலம் கணக்கிடப்படும் மின்சார கட்டணங்களை மக்கள் ஆன்லைன் மட்டுமல்லாது, நேரிலும் சென்று செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like