1. Home
  2. தமிழ்நாடு

குழந்தைகளுக்கான "பால் ஆதார்" வாங்கிட்டீங்களா? சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1

2018ம் ஆண்டிலிருந்தே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதன்பெயர்தான், குழந்தை ஆதார் அட்டை அதாவது "பால் ஆதார்" (Baal Aadhaar) அல்லது நீல ஆதார் அட்டை என்பார்கள்.ஆதார் அட்டை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களின் விவரங்களை உள்ளடக்கிய தனித்தனி அடையாள எண் கொண்டவையாகும் ஒரு தனி மனிதனின் அடையாள சான்றாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 

இந்த ஆதார் கார்டு பார்ப்பதற்கு நீல கலரிலேயே இருக்கும்.. குழந்தைகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. இந்த ஆதார் அட்டையிலும் 12 இலக்க நம்பர்கள் தரப்பட்டிருக்கும் என்றாலும், ஆதார் கார்டுக்கும் - பால் ஆதார் கார்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன..இந்த நீலநிற ஆதார் அட்டைகளில் குழந்தையின் கருவிழி, கைரேகை ஸ்கேன் இவையெல்லாம் தேவையில்லை... குழந்தையின் ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமனால், பெற்றோர்களில் ஒருவர் அவர்களின் அசல் ஆதார் அட்டை மற்றும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்தாலே போதும்...\

ஆனால், குழந்தைகளின் ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் வெறும் 5 வருடங்கள்தான். குழந்தைக்கு 5 வயதாகும்போது, குழந்தையின் போட்டோ, கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்றவற்றை பெற்றோர்கள் புதுப்பிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் கார்டு ரத்தாகிவிடும். நீலநிற கார்டு புதுப்பிக்க கட்டணம் எதுவும் தேவையில்லை.

5 முதல் 15 வயது வரையிலான சிறார்கள், ஆதார் கோரி விண்ணப்பித்து பெற முடியும். இதற்காக, அவர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு, பெற்றோரின் ஆதார் அட்டைகள் போன்றவற்றை ஆவணங்களாக கொண்டு செல்ல வேண்டும்,.. ஆதார் மையத்திலேயே விண்ணப்ப படிவத்தை நிரப்பி தந்து, ஆவணங்களையும், குழந்தையின் போட்டோவையும் தர வேண்டும்.இதெல்லாம் சரிபார்க்கப்பட்டு, 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டை வழங்கப்படும். பிறந்த குழந்தைக்கு கூட நீல நிற ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், இதற்கு குழந்தையின் பிறந்த சான்று, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ரசீதுகள் கட்டாயம் தேவைப்படும்.

ஆன்லைனிலும் பால் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்..

- UIDAI என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்

- அதில், "My Aadhar" பகுதியில், "Book an appointment" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

 - இப்போது "Child Aadhaar" என்ற கேட்டரிகியை தேர்வு செய்து, அதில், "New Aadhar" என்பதை தேர்ந்தெடுத்து, உங்களது செல்போன் நம்பர் மற்றும் கேப்ட்சா நம்பரை பதிவிட வேண்டும்.

- பிறகு "Relationship with Head of Family" என்ற ஆப்ஷனில் உள்ள "Child (0-5 years)" என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்ப வேண்டும்.

- இப்போது உங்களது அப்பாயிண்ட்மென்ட்டை பதிவு செய்து கொள்ளலாம். அதாவது, அருகிலிருக்கும் ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து, உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like